சவாலை எதிர்கொள்ள தயார்:பொன்சேகா
இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்திலேயே இதனை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் ஊழலை அம்பலப்படுத்துவதற்கும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் அரசியல் விருப்பம் உள்ள ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது.
இதுவரை எந்தத் தலைவரும் அப்படிச் செய்யவில்லை. எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவ்வாறானதொரு தலைவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு அமையும் என நான் நம்புகிறேன்.” என்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply