நிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் காயம்
நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் தனது மருமகனுடன் வீட்டு முற்றத்தில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்டு நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply