ஹிருணிகாவை சந்திக்க சிறைச்சாலைக்குச் சென்ற சஜித் பிரேமதாச

இளைஞர்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறையில் உள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். எதிர்கட்சித் தலைவர் அவருடன் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் சட்ட விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது.

அத்துடன் , ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பின் எதிர்கால விவகாரங்கள் குறித்தும் எதிர்கட்சித் தலைவர் அவருடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply