ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றில் மனு
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பிற்கிணங்க உச்ச நீதிமன்றம் அதன் உறுதிப்பாட்டை தெரிவிக்கும் வரை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி சமிந்த லெனவ என்பவரினால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் 30 (2) சரத்து உரிய வகையில் திருத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதற்கான வியாக்கியானத்தை பெற்றுத் தருமாறு அந்த மனுவில் கோரியுள்ளார். அந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர், ஆணையாளர்கள், மற்றும் சட்டமா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அந்த மனு விசாரணை நிறைவு பெறும் வரை ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதை இடைநிறுத்தி தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் அரசியலமைப்பின் 30 (2)சரத்து உரிய வகையில் திருத்தப்படவில்லை என்பது தொடர்பில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் அந்த மனுவில் மேற்படி சட்டத்தரணி கோரியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply