படையினர் ஒதியமலையை அடைந்தனர்
மணலாறு களமுனையில் நகர்வில் ஈடுபட்டுவரும் 59 ஆவது படையணியில் உள்ள 14வது சிங்க ரெஜிமெண்ட் மற்றும் 12வது சிறீ லங்கா லைற் இன்வன்ற்றி அணிகள் இணைந்து புலிகளின் முன்னரங்க பாதுகாப்பரணை உடைத்து நெடுங்கேணியில் இருந்து தெற்காக 6 மைல் தொலைவில் உள்ள ஒதியமலை பகுதியை கைப்பற்றியுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. 59 ஆவது படையணியின் 593 ஆவது பிரிகேட் படையினர் முல்லைத்தீவில் இருந்து தென்மேற்காக 14 கி.மீ தொலைவில் உள்ள குமுழமுனையை சில வாரங்களுக்கு முன் கைப்பற்றியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply