காலி – மாத்தறை பிரதான வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்
காலி – மாத்தறை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இந்த மோட்டார் சைக்கிளானது, வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பாதசாரிகள் கடவைக்காகச் சமிக்ஞை விளக்கிற்கு அருகில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காலி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply