தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபரொருவர் கைது
விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 101 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் (Monofilament Nets) சந்தேகநபரொருவர் திங்கட்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கந்தளாய் பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கந்தளாய், மீனவ கிராமம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சந்தேக நபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply