காலி, இரத்தினபுரி பகுதியில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் 

நாட்டில் காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இன்று செவ்வாய்க்கிழமை (11) நாள் முழுவதும் காற்றின் தர சுட்டெண் 58 தொடக்கம் 108க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவைக் குறிப்பதோடு, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தர சுட்டெண் மிதமான நிலையிலும், காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்பட்டுள்ளது.

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு பெரும்பாலான நகரங்களில் காற்றின் தர சுட்டெண் மிதமானதாக காணப்படும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 1.00 மணி முதல் 2.00 மணி வரை காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியமற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply