தலதா வழிபாடு – இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், இன்றும் நாளையும் யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.
தற்போது குறித்த யாத்திரைக்காக கண்டி நகரில் ஏற்கனவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வரிசையில் கூடியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனவே, இன்று (24) மற்றும் நாளை மறுநாள் (25) புனித தந்த தாது வழிபாட்டுக்கு ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் வருகைத் தந்துள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கும் யாத்ரீகர்கள் வருகைத் தந்தால், அவர்களால் யாத்திரை மேற்கொள்ள முடியாது என்று பொலிஸர் கூறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply