மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் 

அநுராதபுரம், அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த தந்தை, மகன் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நால்வரும் சிகிச்சைக்காக அநுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply