மது போதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்
மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் திகதி அம்பாறை காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில் மதுபோதையில் வாகனம் செலுத்திய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை வலய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதோடு, எதிர்வரும் 23 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், தொடர்புடைய பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply