தம்பியை கொடூரமாக தாக்கிய அண்ணா

பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ பேஸ்புக்கில் பதிவிட்டு, இளைய சககோதரர் ஏற்கனவே மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த நபரின் உயிர், அறுவை சிகிச்சை நிபுணரின் திறமையால் காப்பாற்றப்பட்டது என்றும், காயமடைந்த நபர் சுமார் ஒரு மாத காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார் என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ கூறினார்.

இந்த இரண்டு சகோதரர்களும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, காயங்களை ஏற்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply