பேருந்து மீது சரிந்து விழுந்த பாரிய மரம்

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது மரம் விழுந்ததில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 


ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது வோரோடு மரம் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் நேற்று (30) மாலை மரம் வெட்டப்படும் வரை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது. 

மரம் சரிந்த நேரத்தில் பேருந்தில் யாரும் இல்லை என்றும், மரம் முறிந்து விழுந்ததால் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply