ஆலய கேணியில் புகைப்படம் எடுத்தவேளை கேணிக்குள் தவறி வீழ்ந்து இரு மாணவிகள் உயிரிழப்பு
கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில், இன்றைய தினம் (01.06.2025) செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்துள்ளனர்.
முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். இந்நிலையில் இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவிகளும் பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply