கொலையில் முடிந்த தகாத உறவு மனைவியை கொன்றுவிட்டு கணவன் தலைமறைவு

கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.

கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட கணவன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறின் போது கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply