3,000 வாகனங்களுடன் தீப்பற்றி எரியும் கப்பல் 

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயை அணைக்க முடியவில்லை என்பதால் கப்பலைக் கைவிட்டுள்ளது. இதனை, கப்பலை இயக்கும் சோடியாக் மேரிடைம் நிறுவனத்தின் பணிப்பாளர் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 26 ஆம் திகதி மொர்னிங் மிடாஸ் என்கின்ற லைபீரியா கொடி ஏற்றப்பட்ட இந்த கப்பல் சீனாவின் யான்டாய் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு மெக்சிகோவின் லாசரோ கார்டெனாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதன்போது, ஆரம்பத்தில் மின்சார வாகனங்கள் நிரப்பப்பட்ட தளம் ஒன்றிலிருந்து தீப்பிடித்து எரிந்து புகை வெளிவந்துள்ளது. கப்பல் எந்த பிராண்ட் வாகனங்களை ஏற்றிச் சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் அலாஸ்காவில் உள்ள அடாக்கிலிருந்து தென்மேற்கே 300 மைல் (482.8 கிமீ) தொலைவில் இருப்பதாக கடலோர காவல்படை அதன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply