சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி – 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம்
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்றுடன் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (05) நான்காம் நாளாகத் தொடர்ந்தன.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஆனந்தராசாவின் கண்காணிப்பின் கீழ் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்றைய அகழ்வில் ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டன.
இந்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை (06) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் திறந்த வெளி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply