யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் மச்சான் முறையுள்ள 19 வயதுடைய இளைஞன் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply