கண்டி வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி
கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹாரிஸ்பத்து பகுதியைச் சேர்ந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டும் போது, அந்த நபர் கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply