வவுனியாவில் வர்த்தக நிலையத்தினுள் கத்திக்குத்து மூதாட்டி படுகாயம் மற்றொரு பெண் கைது
வவுனியா – உக்குளாங்குளத்தில் பெண் ஒருவர் மீது பிறிதொரு பெண் கத்தியால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவமானது வவுனியா, பண்டாரிக்குளம், முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
64 வயதுடைய பெண் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது உக்குளாங்குளம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரு பெண்களுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்த முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply