நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை அற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சபர்கமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply