இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு 24 மணித்தியால விசேட பாதுகாப்பு

இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள இடங்களுக்கு 24 மணித்தியால விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து காவல்நிலையங்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களை கருத்திக்கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் மற்றும் போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply