லெபனானில் 58,000 இடம்பெயர்ந்தனர்: 50க்கும் மேற்பட்டோர் பலி

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 58,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், லெபனான் முழுவதும் தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. லெபனான் அரசாங்க அறிக்கைகளின்படி, கடந்த 48 மணி நேரத்தில் தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட்டில் 58,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply