நாட்டின் பல மாகாணங்களில் அதிக உஷ்ணம் அவதானமாக இருக்குமாறு அறிவுரை
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றைய தினம் 16 ஆம் திகதி வெப்பச் சுட்டியானது மனித உடலில் உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில், காணப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுள்ளது.
அதிக வெப்பமான சந்தர்ப்பங்களில் அதிகளவு நீரை அருந்துவது, வயல் வௌிகள் போன்ற இடங்களில் தொழிலில் நீண்ட நேரம் ஈடுபடுதலை தவிர்த்தல், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வௌியில் செல்வதை தவிர்த்தல் சிறுவர்கள் வெயிலில் விளையாடுவதைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply