எரிபொருள் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு
நாட்டில் QRமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால்,நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில்,எரிபொருள் நிலையங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசல் மற்றும் நீண்ட வரிசைகளும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிலைமையைக் கட்டுப்படுத்தவே,பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை. QR குறியீட்டுக்கமைய அந்தந்த வாகன வகைகளுக்கு ஏற்ப தேவையான எரிபொருள் அளவு முறையாக வழங்கப்படும். மக்களின் தேவையற்ற அவசரமே எரிபொருள் நிலையங்களில் இந்தளவு சன நெரிசல் ஏற்படக் காரணம்.
இதனால், அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்களை ஈடுபடுத்தியுள்ளோம்.பொதுமக்கள் அமைதி காத்தால் பிரச்சினை ஏற்படாது. 10 லீற்றர் தேவைப்படும் இடத்தில் 50 லீற்றர் பெற்றுக் கொள்ள முற்படுகிறார்கள். இவை அனைத்தும் அவசரப்படுவதால் ஏற்படும் விளைவுகள். யுத்த நிலைமை காரணமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு முகாமைத்துவமே இது. வாகனத்திற்குத் தேவையான எரிபொருளை எந்தவொரு நிலையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply