ஈராக் குர்திஸ்தான் அதிபரின் இல்லத்தின் மீது தாக்குதல்! கண்டிக்கிறது அமெரிக்கா

ஈராக் குர்திஸ்தான் அதிபரின் இல்லத்தின் மீதான தாக்குதலை அமெரிக்கா கண்டனம் செய்துள்ளது.ஈராக்கிய குர்திஸ்தான் தன்னாட்சிப் பிராந்தியத்தின் அதிபர் நெசிர்வான் பர்சானியின் இல்லத்தின் மீதான தாக்குதலை, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப் போராளிக் குழுக்களே காரணம் என்று குற்றம் சாட்டி அமெரிக்கா சனிக்கிழமையன்று சந்தேகத்திற்கு இடமின்றி மற்றும் வலுவாக கண்டனம் தெரிவித்தது.

ஈரான் மற்றும் அதன் முகவர்களின் இந்த நடவடிக்கைகள், ஈராக்கின் இறையாண்மை, ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமை மீதான நேரடித் தாக்குதலாகும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் ஓர் அறிக்கையில் தெரிவித்தார் .

ஈராக் குர்திஸ்தான் பிரதமர் மஸ்ரூர் பர்சானியும் இந்த கோழைத்தனமான ட்ரோன் தாக்குதலை கண்டித்தார்.

மீண்டும் ஒருமுறை, மத்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு, இந்தக் சட்டவிரோதக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி, இந்தக் குழுக்களால் தொடர்ந்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் எக்ஸ் தளத்தில் எழுதினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply