ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம்: அதிபர் டிரம்ப் தகவல்
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய வல்லரசுகளுக்கு இடையே இறுதி வடிவம் பெறுவதற்கு உட்பட்ட வகையில் ஒரு ஒப்பந்தம் பெருமளவில் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது உள்ளிட்ட அம்சங்களை கொண்ட இந்த ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார். அமெரிக்கா-ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தனது எக்ஸ் தளத்தில், ‘‘சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார்.
தற்போதைய மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை கொண்டுவருவதற்காக நடைபெற்று வரும் அமைதி முயற்சிகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கலந்துரையாடல்கள் பயனுள்ள வாய்ப்பை வழங்கியது. எனவே அமெரிக்கா-ஈரான் இடையே அடுத்தகட்ட அமைதி பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply