ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் பாக்.கில் பயணிகள் ரயிலில் குண்டுவெடித்து 24 பேர் பலி: பலூசிஸ்தானில் பயங்கரம்

ராணுவ வீரர்களை குறிவைத்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் ரயில் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகினர். 70 பயணிகள் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா கன்டோன்மென்ட்டில் இருந்து குவெட்டா ரயில் நிலையம் நோக்கி குறுகிய தூர பயணிகள் ரயில் நேற்று காலை 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. பக்ரீத் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இணைப்பு ரயில்களை பிடிப்பதற்காக பொதுமக்கள் பலரும் இந்த ரயிலில் பயணித்தனர். மேலும், கன்டோன்மென்ட்டில் இருந்து ராணுவ வீரர்களும் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சமன் பதக் ரயில் நிலையம் அருகே வந்த போது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ரயில் மீது மோதியது. இதில் ரயிலின் இன்ஜின் மற்றும் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. சக்திவாய்ந்த குண்டுவெடிப்பால், அப்பகுதியில் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பலாகின. குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து சேதமடைந்ததோடு, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து தெறிந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply