கிளிநொச்சி மாவட்டத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகள்: நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி பிரதேச செயலகப் பிரிவில் முதற்கட்டமாக நூறு நிரந்தர வீடுகளை நிர்மாணபிப்பதற்கான பணிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேற்று ஆரம்பித்தது. இத்திட்டத்தின் கீழ் ஐம்பது குடும்பங்களுக்கு ஐம்பதினாயிரம் ரூபா படி வீடுகளை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கவென நேற்று நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நூறு வீடுகளும் கரச்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விவேகாந்த நகர், ஆனந்தபுரம், கணேசபுரம் ஆகிய நகர்களில் அமைக்கப்படவிருப்பதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். ஜேர்மன் நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையோடு அமைக்கப் படும் வீடுகளுக்கென மூன்று கோடியே 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இதேவேளை இம்மாவட்டத்தில் மேலும் இருநூறு வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப வேலைகளும் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply