பாதுகாப்பச் செயலாளர் கிழக்கு படைத்தளங்களுக்கு விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ராஜபக்க்ஷ,முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் சகிதம் கிழக்குப் படைத்தளங்களுக்கு நேற்றுக் காலை விஜயம் மேற்கொன்டார். கிழக்கு படைத்தளத்தை  காலை வந்தடைந்த பாதுகாப்புச் செயலாளரை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரி அவர்கள் வரவேற்றார். இங்கு செங்கம்பள வரவேற்புடன் படையினரின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு தலைமயகத்தில் ஞாபகார்த்த மரக்கன்றை நாட்டியதுடன் அங்கு படை உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு விடயங்களை ஆராய்ந்தார்.

அதைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பூனானியில் அமைந்துள்ள 23வது படைகளின் கட்டளைத் தளத்துக்குச் சென்றனர்.அங்கு அதன் கட்டளைத்தளபதி பிரிகேடியர் பொனிபர்ஸ் பெரா அவர்களால் வரவேற்கப்ட்டதுடன்.அங்கு பிரமான்டக ஏற்பாடு செய்யப்ட்டிருந்த மிக அரிது 100 மரக்கன்றுகள் நாட்டு வைபவத்திலும் கலந்து கொன்டார்.

இதைத் தொடர்ந்து கிழக்கு பிராந்தியத்தில் நிலைகொன்டுள்ள படையினர் 4000 பேர் மத்தியல் உரையாற்றினார்.

இங்கு உரையாற்றுகையில் கடந்த கால பயங்கரவாதிகளின் செயற்பாடுகளினால் இப்பகுதியில் எற்பட்ட அழிவுகள் அவர்களின் பயங்கரவாத உபாயம் போன்றவற்றை அதிகாரிகளுக்கும் படைவீரவர்களுக்கும் ஞாபகப்டுத்தியதுடன் இன்றய நிலைப்பாட்டையும் தெளிவு படுத்தினார். மேலும் உரையாற்றுகையில்,வெளிநாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாதிகள் நாட்டில் மீன்டும் பயங்கரவாதத் துளிக்க வைக்க சூடசி செய்து கொன்டுவருகின்றனர் எனவே படையினரும் பொலிசாரும் 24 மணிநேரமும் விழப்பாக இருக்க வேன்டும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து படையினருக்ககாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் ,அரசாங்கம் ஆற்றிவரும் நலன் புரித்திட்டங்களை தெளிவு படுத்தியதுடன் படையினரிடம் அவர்களது தேவைகளையும் கேட்டறிந்து கொன்டார். இதைத் தொர்ந்து பூனானியில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பனிமனையின் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் எல்ரிரிஈ படையினரையும் பார்வையிட்டார். அங்கு சென்ற பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகளை முன்னாள் போராளியினால் வெத்லை வைத்து வரவேற்கப்ட்டார்.

இங்கு புனர்வாழ்வு நிலையத்தில் முற்றாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் சமுதாயத்தில் நல்ல பிரஜைகளாக பிரவேசி்க்க வேன்டிய தொழிற் திறன் பயிற்சி வழங்கப்ட்ட 30 பேருக்கு சான்றுதல்கள் மற்றும் அன்பளிப்புகளும் பாதுகாப்புச் செயலாளரினால் வழங்கப்பட்டது. இங்கு நன்றி உரையாற்றிய முன்னாள் போராளி அரசாங்கம் முன்னாள் போராளிகளுக்கு ஆற்றிவரும் சேவைகளுக்கு அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்தார்.

இங்கு தச்சு வேலை,மேசன்,பிளம்பிங், வீட்டுவயறிங் என்பனவற்றுக்கான பயற்ச்சிகள் வழங்க்கபட்டு அதற்கான சான்றுதல்கள் வழங்கப்ட்டமை குறிப்பிடத்தக்கதாகும். பாதுகாப்புச் செயலாளரின் விஜயத்தின் இறுதியாக சோமாவதி விகாரைக்குச் சென்று மதவழிபாடுகளிலும் கந்து கொன்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply