இலங்கையர்க்கு நியூசிலாந்தில் சமாதமான நீதவான் பதவி
இலங்கைத் தமிழர் ஒருவருக்கு நியூசிலாந்தில் சமாதான நீதவான் பதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையர் ஒருவர் நியூசிலாந்தில் சமாதான நீதவானாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
முத்தையா பரந்தாமன் என்ற இலங்கையரே இவ்வாறு சமாதான நீதவானாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாய்காட்டோ சமாதான நீதவான் பேரவையில் பரந்தாமனுக்கு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. முத்தையா பரந்தாமன் கண்டியைச் சேர்ந்தவர் எனவும், இலங்கையில் பொதுநிர்வாகப் பணி மற்றம் நகை வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நியூசிலாந்து ஹமில்டன் நகர பல்கலாச்சார சங்கத்தின் தலைவராகவும் பரந்தாமன் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முத்தையா பரந்தாமனின் சகோதரர் பஞ்சலிங்கம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளார் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பரந்தாமன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply