500 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுதலை
ஒரு வருட காலம் புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு பிரதேச முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களே இன்றைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர். மேலும் இந்த புனர்வாழ்வு நிகழ்வுகள் வவுனியா கலாச்சார நிலையத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இதன் போது புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் கலை திறமைகள் அரகேற்றப்படவுள்ளதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுகளில் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply