இதுவரை வெளிவந்த 97 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளின் முழுமையான விபரம்
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியான 235 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின்படி 207 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. இலங்கையில் உள்ள 335 உள்ளுராட்சி சபைகளில் நேற்றைய தினம் 235 உள்ளுராட்சி சபைகளுக்கு மாத்திரமே தேர்தல் நடத்தப்பட்டது, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை காரணம் காட்டி அரசாங்கம் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகர சபைகள் உட்பட பல உள்ளுராட்சி சபைகளின் தேர்தலை ஒத்திவைத்தது.
அத்துடன் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் கிளிநொச்சியில் இரண்டு உள்ளுராட்சி சபைகள் உட்பட பல உள்ளுராட்சி சபைகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. நேற்றைய தினம் 100 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அமோக வெற்றியை பெற்றுள்ளது. 235 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆளும் கட்சி 207 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.
இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளுராட்சி சபைகளும் அடங்கும். மன்னார் முசலி பிரதேச சபை, வவுனியா சிங்கள பிரதேச சபை, மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபை, காத்தான்குடி நகர சபை, கோரளை பற்று மேற்கு பிரதேசபை, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சிங்கள மக்கள் அதிகம் வசிக்கும் 7 உள்ளுராட்சி சபைகள் உட்பட 8 சபைகளை ஆளும் கட்சி கைப்பற்றியது.
திருகோனமலை மாவட்டத்தின் கிண்ணியா நகர சபை, மூதூர் பிரதேச சபை, கோமரங்கடவல பிரதேச சபை உட்பட 7 உள்ளுராட்சி சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.
இலங்கை தமிழரசு கட்சி 12 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. இதில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை, , அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை, ஆலையடிவேம்பு பிரதேச சபை, திருகோணமலை நகர சபை, வெருகல் பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் மாநகர சபையை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதேவேளை நுவரெலியா பிரதேச சபை மலையக மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி 9 உள்ளுராட்சி சபைகளை மாத்திரமே கைப்பற்றியது அந்த கட்சி கண்டி மாவட்டத்தின் கம்பளை நகர சபை, கடுகன்னாவ நகர சபை, பாத்தஹேவாஹெட்;ட பிரதேச சபை, குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய நகர சபை, கொழும்பு மாவட்டத்தின் சீதவாக்கபுர நகர சபை மற்றும் களுத்துறை நகர சபை, பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை மாநகர சபை, பசறை பிரதேச சபை, அம்பாறை மாவடத்தில் உள்ள லஹூகல பிரதேச சபை என்பவற்றை கைப்பற்றியது. இந்த தேர்தலில் ஜே.வி.பி எந்த பிரதேச சபையையும் கைப்பற்றவில்லை, அந்த கட்சியின் ஆட்சி செய்து வந்த திஸ்ஸமஹாரம பிரதேச சபையையும் பறிக்கொடுத்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 76 ஆசனங்கள் :
3 மாநகர சபைகள், 30 நகரசபைகள், 202 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று வாக்குப் பதிவுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1839 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சி மொத்தமாக 3,338,401 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 2,032,891 வாக்குகளுடன் 892 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி 11 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 76 ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன் மொத்தமாக 70,171 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை, , அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை, ஆலையடிவேம்பு பிரதேச சபை, திருகோணமலை நகர சபை, வெருகல் பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 88,592 வாக்குகளுடன் 50 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
அத்துடன், ஜே.வி.பி என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி 181,270 வாக்குகளுடன் 57 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
நேற்றைய தினம் அளிக்கப்பட்ட மொத்த சதவீதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 56 வீதத்தைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அது 34 சதவீதமாக காணப்படுகிறது.
235 உள்ளுராட்சி மன்றங்களுக்கான 3,036 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பே நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழரசு கட்சி 9 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது
இதுவரை வெளியான 162 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின்படி 141 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியான 162 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின்படி 141 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 7 உள்ளுராட்சி சபைகளை மாத்திரமே கைப்பற்றியுள்ளது. அந்த கட்சி கம்பளை நகர சபை, பண்டாரவளை மாநகர சபை, குளியாப்பிட்டி நகர சபை, சீதவாக்கபுர நகர சபை மற்றும் களுத்துறை நகர சபை மற்றும் பாத்தஹேவாஹெட்;ட பிரதேச சபை என்பவற்றை கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி 9 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. இதில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை, , அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை , திருகோணமலை நகர சபை, வெருகல் பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், அட்டாளைச்சேனை ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச சபை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதேவேளை நுவரெலியா பிரதேச சபை மலையக மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி 8 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியான 142 உள்ளுராட்சி சபைகளில் 123 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 7 உள்ளுராட்சி சபைகளை மாத்திரமே கைப்பற்றியுள்ளது. அந்த கட்சி கம்பளை நகர சபை, பண்டாரவளை மாநகர சபை, குளியாப்பிட்டி நகர சபை, சீதவாக்கபுர நகர சபை மற்றும் களுத்துறை நகர சபை மற்றும் பாத்தஹேவாஹெட்;ட பிரதேச சபை என்பவற்றை கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி 8 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. இதில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை, , அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை , திருகோணமலை நகர சபை, வெருகல் பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர் ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச சபை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதேவேளை நுவரெலியா பிரதேச சபை மலையக மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி 7 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது
இலங்கை தமிழரசு கட்சி மன்னார், வவுனியா தமிழ் பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை மற்றும் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபைகளையும், திருகோணமலை நகர சபையையும் கைப்பற்றியுள்ளதாக இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை வெளியான தேர்தல்கள் முடிவுகளின்படி இலங்கை தமிழரசு கட்சி மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை, அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை , திருகோணமலை நகர சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது.
100 உள்ளுராட்சி சபைகளில் 82 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியான 100 உள்ளுராட்சி சபைகளில் 82 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 6 உள்ளுராட்சி சபைகளை மாத்திரமே கைப்பற்றியுள்ளது. அந்த கட்சி கம்பளை நகர சபை, பண்டாரவளை மாநகர சபை, குளியாப்பிட்டி நகர சபை, சீதவாக்கபுர நகர சபை மற்றும் களுத்துறை நகர சபைகளை கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி 7 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. இதில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை, வவுனியா தமிழ் பிரதேச சபை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை, அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை, திருகோணமலை நகர சபை, வெருகல் பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர் ஆகிய உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச சபை தேசிய காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதேவேளை நுவரெலியா பிரதேச சபை மலையக மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது.
146 மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை
இலங்கை தமழரசுக் கட்சி – 06 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 03 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 1 ஆசனங்கள்
வவுனியா மாவட்டம் வெண்கலச் செட்டிக் குளம் பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 05 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 02 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 02 ஆசனங்கள்
திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி – 05 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 01 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 01 ஆசனம்
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 07 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 04 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 01 ஆசனம்
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெலி பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 04 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 01 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 01 ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 01 ஆசனம்
திருகோணலை மாவட்டம் திரு கோணமலை நகர சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 08 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 02 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 01 ஆசனம்
ஜே.வி.பி – 01 ஆசனம்
மன்னார் மாவட்டம்
மன்னார் பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 05 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 02 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 02 ஆசனங்கள்
வவுனியா மாவட்டம்
வவுனியா தெற்கு பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 07 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 02 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 01 ஆசனம்
முல்லைத்தீவு மாவட்டம் – மாந்தை கிழக்கு பிரதேச சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 3
மன்னார் மாவட்டம் மன்னார் நகர சபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 05 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 02 ஆசனங்கள்
இதுவரை வெளிவந்த 97 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளின் முழுமையான விபரம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 660 ஆசனங்கள் (1,061,601 வாக்குகள்)
ஐக்கிய தேசியக் கட்சி – 320 ஆசனங்கள் (635,651)
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 42 ஆசனங்கள் (41,933)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 21 ஆசனங்கள் (32,814)
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 16 ஆசனங்கள் (60,668)
மலையக மக்கள் முன்னணி – 13 ஆசனங்கள் (27,047)
இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி – 04 ஆசனங்கள் (8,646)
3 மாநகர சபைகள், 30 நகரசபைகள், 202 பிரதேச சபைகளை உள்ளடக்கிய 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று
வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. இதில் 3,049 உறுப்பினர்கள் (ஆசனங்கள்) தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply