சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தை வடக்கு கிழக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளனர் : சுரேஸ்
சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தை வடக்கு கிழக்கு மக்கள் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியே வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது கட்சியை ஆதரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 12 உள்ளுராட்சி மன்றங்களை தமது கட்சி கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தப் போவதாகக் கோரிய தாம் மக்களிடம் வாக்குகளைக் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோரிக்கைக்கு மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply