இலங்கையில் தேர்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் பதினாறு வன்முறைகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் 16 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரிடையே இடம்பெற்றுள்ளன என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் “கபே’ தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெற்ற இவ்வன்முறைச் சம்பவங்களில் மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அடங்குவதுடன் 7 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் “கபே’ அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவித்ததாவது,
தேர்தலின் பின் தம்புள்ளை, கம்பஹா, காலி, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அநேகமான வன்முறைச் சம்பவங்கள் ஐ. ம. சு. முன்னணியினரிடையேயே இடம்பெற்றுள்ளது. அதாவது 16 வன்முறைச் சம்பவங்களில் 14 வன்முறைச் சம்பவங்கள் ஐ. ம. சு. முன்னணியினரிடையில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், நபர்கள் மீதான தாக்குதல், அச்சுறுத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதுவரையில் இடம்பெற்ற எந்தவொரு உள்ளூராட்சி சபைத் தேர்தல் சமயத்திலோ அதன் பின்னரோ இவ்வாறு இடம்பெறவில்லை.
தேர்தலின் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் சிறுமியொருவரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply