ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் இன்று
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய செயற்குழுக் கூட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய தலைவர்களை தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் வி;க்ரமசிங்கவிற்கு ஆதரவானவர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சஜித் பிரேமதாச தலைமைத்துவ பதவிக்காக போட்டியிட வேண்டுமென சிலர் வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைமைத்துவப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென ஒரு தரப்பினர் கோரி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. வாக்கெடுப்பு நடத்தாது கட்சியின் அனைத்து தரப்பினரும் கூட்டாக இணைந்து தலைமைத்துவப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதிக்கு முன்னர் கட்சியின் புதிய யாப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply