நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்யக் கூடாது : கார்தினால் மெல்கம் ரஞ்சித

நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்யக் கூடாது என கார்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவி;த்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சக்திகளின் தலையீடு பிரச்சினைகளை மேலும் சிக்கல் மிகுந்ததாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்றி நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இனங்களுக்கு இடையில் நிலவி வரும் பேதங்களை களைவதற்கு சகல இன மக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply