த.தே.கூட்டமைப்பு – மு.கா. கூட்டிணைவு: மறுக்கிறார் ஹக்கீம்
ஒரு சில ஊடகங்கள் சில வேளைகளில் எல்லை மீறி விடுகின்றன. பத்திரிக்கை தர்மம் என்பது மிகப் பொறுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நேற்று கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட மக்நாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
பெரும்பான்மை ஊடகங்கள் சில சிறுபான்மைச் சமூகம் சார்ந்த செய்திகளை திரிபுபடுத்துகின்றன. சிலவற்றை இருட்டடிப்புச் செய்கின்றன. உதாரணத்திற்கு ஞாயிறு சிங்கள தினசரி ஒன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது வெளிநாட்டுச் சக்தி ஒன்றின் உதவியுடன் தமிழர் கூட்டமைப்புடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக எழுதியுள்ளது.
அப்படி ஒரு விடயம் தலைவன் என்ற வகையில் எனக்கே தெரியாது. இப்படி கற்பனை செய்திகளைக் கூட பிரசுரிக்கின்றது.
ஜனாதிபதி ஊடக ஆசிரியர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையை சில தமிழ் ஊடகங்கள் சிறப்பான முறையில் செய்தி வெளியிட பெரும்பான்மை ஊடகங்கள் சில இருட்டடிப்புச் செய்துள்ளன. இவ்வாறு பல உதாரணங்களைக் கூறலாம் என்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பு வருட உத்தியோகத்தர் தெரிவும் இடம் பெற்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply