தொழில்நுட்ப முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்
உலகின் பிரபல கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான, ஆப்பிள் நிறுவனத்தை கூட்டாக உருவாக்கியவர்களில் ஒருவரான, ஸ்டீவ் ஜாப்ஸ் , காலமானர்.நீண்ட காலமாக , புற்று நோயால் அவதிப்பட்டுவந்த, ஜாப்ஸ், நேற்று இரவு காலமானதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அவருக்கு வயது 56. உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த ஆகஸ்டு மாதம்தான், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகியிருந்தார்.
ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது.
ஜாப்ஸின் அறிவு, உற்சாகம் மற்றும் தொழிலில் அவர் காட்டிய ஆர்வம் ஆகியவைதான், இந்த நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலாக அமைந்தன என்று , ஆப்பிள் நிறுவனம் கூறியது.
ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் குறித்து உலகத்தலைவர்களும், ஆப்பிள் நிறுவனப் பொருட்களை உபயோகிப்போர்களும் தங்களது அஞ்ச்லியைத் தெரிவித்துள்ளனர்.
ஸ்டீவ் ஜாப்ஸ் நமது வாழ்க்கையை மாற்றியவர், ஒட்டுமொத்தமாக பல தொழிலக்ளுக்கு புது அர்த்தம் தந்தவர் என்று தமது அஞ்சலியில் அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டார்.
அவரது மரணம் குறித்து அவர் கண்டுபிடித்த கருவியிலேயே உலகில் பெரும்பாலோனோர் தெரிந்து கொண்டனர் என்பதைவிட அவருக்கு பெரிய அஞ்சலி எதுவும் இருக்க முடியாது என்றும் ஒபாமா கூறினார்.
ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீனவில் ட்விட்டருக்கு இணையான சமூக இணைய தளம் ஒன்றில், அவரது மரணம் குறித்து 5 கோடிக்கும் மேலான அஞ்சலிக் குறிப்புகள் பதியப்பட்டுள்ள்ன.
அது போல, ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியை அவதானித்துக்கொண்டிருந்த, போட்டி நிறுவனங்களில் தலைவர்கள் மற்றும் தொழில்துறை சகாக்களிடமிருந்தும் அஞ்சலிகள் வந்திருக்கின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவரான, பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் செலுத்திய தாக்க்ததைப் போல உலகில் வேறொருவரைக் காண்பது அபூர்வம் என்றார்.
பேஸ் புக் இணைய தளத்தின் நிறுவனரான, மார்க் ஸுக்கர்பெர்க், தனது பேஸ் புக் பக்கத்தில், ஸ்டீவ் ஜாப்ஸை தனது ந்ண்பர் மற்றும் ஆலோசகர் என்று குறிப்பிட்டு, ” நாம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் உலகை மாற்ற முடியும்ென்று காட்டியதற்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்.
ஸ்டீவ் ஜாப்ஸை, தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஐன்ஸ்டீனோடு ஒப்பிட்டு புகழஞ்சலி செலுத்தினார் நியூ யார்க் மேயர் மைக்கேல் புளூம்பர்க்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply