கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி

கொழும்பு மாநகர சபை ஆட்சியை  ஐக்கிய தேசியக் கட்சி கைப்பறியுள்ளது. சுமார் 60 வருடங்களுக்கு மேலாக கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை தொடர்ச்சியாக கைப்பற்றி வந்த ஐக்கிய தேசியக்கட்சி இம்முறையும் தனது அதிகாரத்தை தக்க வைத்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி  101,920 வாக்குகளைப் பெற்று 24 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளராக ஏ. ஜே.எம் முஸ்ஸமில் போட்டியிட்டார். 

 ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக  முன்னாள் அமைச்சரான மிலிந்த போட்டியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  77,089   வாக்குகளைப் பெற்று 16   ஆசனங்களை கைப்பற்றியது.  மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 26,229   வாக்குகளைப் பெற்று 6  ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் 9,979 வாக்குகளைப் பெற்று  2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு மாநகர சபையைத் தம்வசமாக்கிக் கொள்ளும் பொருட்டு ஆளுந்தரப்பு அமைச்சர்கள் மட்டுமின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் களம் இறங்கி பிரசார நடவடிக்கைகளையும் மக்கள் சந்திப்புகளையும் நடத்தியிருந்தார். பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் களமிறங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். கடந்த முறை யாழ்.மாவட்டத்தில் நடந்த உள்ளுராட்சி தேர்தலி;ல் ஐனாதிபதி , அமைச்சர்கள் என முழு பட்டாளமும் யாழ்ப்பாணத்தில் வாடி அடித்து பிரசாரங்களை செய்தது போல கொழும்பு மாநகரசபையை கைப்பற்றவதற்காக மகிந்த தரப்பு தலைகீழாக நின்று பிரசாரம் செய்தது. கொழும்பின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றான கொழும்பு மத்திய தொகுதியில் (தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வெள்ளவத்தை பிரதேசம் ) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  படுதோல்வியடைந்துள்ளது.

கொழும்பு மாநகர சபைத் தேர்தல் முழுமையான முடிவுகள்

ஐக்கிய தேசிய கட்சி 101,920 வாக்குகள் 24 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 77,089 வாக்குகள் 16 உறுப்பினர்கள்

ஜனநாயக மக்கள் முன்னணி (மனோ கணேசன்) 26,229 வாக்குகள் 6 உறுப்பினர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் 9,979 வாக்குகள் 2 உறுப்பினர்கள்

ஐக்கிய ஜனநாயக முன்னணி 7,830 வாக்குகள் 2 உறுப்பினர்கள்

சுயேட்ச்சைகுழு (2) 4,085 வாக்குகள் 1 உறுப்பினர்

மக்கள் விடுதலை முன்னணி 3,162 வாக்குகள் 1 உறுப்பினர்

சுயேட்ச்சைகுழு (1), 2,962 வாக்குகள் 1 உறுப்பினர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply