ஜீ.எல்.பீரிஸ், மாலைதீவு ஜனாதிபதி சந்திப்பு

மாலைதீவிற்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாளைய தினம் அந்த நாட்டு ஜனாதிபதி மொஹமட் வஜீட்டை சந்திக்கவுள்ளார்.இதுதவிர, மாலைதீவு வெளிவிவகார துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட மேலும் சில உயர்மட்ட பிரமுகர்களை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
 
முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஜீட் பதவி நீக்கப்பட்டதன் பின்னர் மாலைதீவிற்கு விஜயம் முதலாவது இலங்கை ராஜதந்திரி, வெளிவிவகாரத்துறை அமைச்சராவார்.
 
அமெரிக்காவினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு மாலைதீவு தமது வாக்கை எதிராக பயன்படுத்தியிருந்தது.
 
அந்த வகையில், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வாக்கை பதிவு செய்தமை தொடர்பில் தமது நன்றிகளை தெரிவிப்பதே வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் பயணத்தின் நோக்கமாக உள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply