பூசா முகாமிலிருந்த ஒரு தொகுதியினர் விடுதலை

இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் உட்பட இந்தச் சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு, பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் உறவினர்களுக்கு பற்றுச் சீட்டும் அப்போது வழங்கப்பட்டிருந்தது.

விடுதலையாகி வீடு திரும்பியவர்களின் தகவல்களின்படி 13 பேர் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் 21 பேர் வீடு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. வீடு திரும்பியவர்களில் 7 வயதுச் சிறுவனுடன் அழைத்துச் செல்லப்பட்ட தாயும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

5 பேர் தொடர்ந்தும் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலையானவர்களின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

குறித்த கைது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து, இவர்களது விடுதலை தொடர்பாக கோரிக்கை முன்வைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply