வறிய நாடுகளை ஏமாற்றும் மேலைத்தேய நாடுகளுக்கு எதிராக ஐநா நடவடிக்கை
வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் நிலம் வாங்குவது தொடர்பாக உலகளாவிய வழிகாட்டு விதிமுறைகளை ஐ.நா. மன்றம் உருவாக்கியுள்ளது.
200 மில்லியன் ஹெக்டேர் நிலம் – அதாவது பிரிட்டனின் அளவை விட எட்டு மடங்கு அதிகமான ஒரு நிலப்பரப்பை கடந்த பத்து ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள ஏழை நாடுகளிடம் இருந்து வெளிநாடுகள் விலை கொடுத்து வாங்கியுள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எத்தியோப்பியா, தெற்கு சுடான், கொங்கோ குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகள் தமது நாடுகளில் பெரும் நிலங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கின்றன.
இப்படி, வெளிநாட்டு அரசும், நிறுவனங்களும் மற்ற நாடுகளில் சென்று நிலத்தை வாங்கி பயன்படுத்தும்போது, ‘நில அபகரிப்பு’ நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஐ.நா மன்றம் புதிய வழிக்காட்டுதலை உருவாக்கியுள்லது.
அதன்படி, வெளிநாட்டு நிலங்களைப் பயன்படுத்தும் சர்வதேச நிறுவனங்கள் அப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்களுடைய மனித உரிமைகளை மதித்து நடப்பதில் அவர்களுக்கு இருக்கின்ற பொறுப்பை வலியுறுத்துவது ஐ.நா. வழிகாட்டு விதிகளின் நோக்கமாகும்.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் நிலம் வழங்கப்படுகின்ற ஒப்பந்தத்தில் ஈடுபடும் இருதரப்பும், அந்நிலத்தில் வாழ்ந்துவரும் மக்களிடம் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்இ அச்சமூகங்களைக் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் வழிகாட்டு விதிகள் கூறுகின்றன.
வெளிநாட்டு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு நிலங்கள் வந்த பின்னாலும், அப்பகுதியில் காலங்காலமாக வாழ்ந்துவருபவர்கள் அந்நிலத்தையும் காடுகளையும் மீன்வளஇ நீர்வள ஆதாரங்களையும் பயன்படுத்த தொடர்ந்து உரிமை வழங்கப்படுவதற்கு இந்த வழிகாட்டு விதிகள் கோருகின்றன.
ஆனால் இந்த விதிகள் சட்டப்படி மதித்து நடக்கப்பட வேண்டிய கட்டாய விதிகளாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply