சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு எதிர்ப்பு
சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்த நீதிபதி மார்கண்டேய கட்சு, இது நமது கலாசாரம் தரம் தாழ்ந்து வருவதை காட்டுவதாக தெரிவித்தார்.
மார்கண்டேய கட்சுவால் நடத்தப்படும் காலிதாஸ்-காலிப் பவுண்டேசன் நடத்திய விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் மாமேதை டாக்டர். அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க தாமதம் ஆனதை சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் போராடிய காசி நஸ்ருல் இஸ்லாமிற்கு ஏன் இவ்விருதை வழங்ககூடாது என கேள்வி எழுப்பினார்.
மேலும், அவரின் பெங்கால் புரட்சி பாடல்கள் உருது மொழியில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்க்காதது குறித்து தன் வேதனையை தெரிவித்தார்.
நாட்டின் பிற மக்களும் படிக்கும் வகையில் ஹிந்தி மொழியில் மொழிபெயர்க்கும் இந்த யோசனையை மம்தாவும் விரும்புவார் என கருதுவதாக தெரிவித்தார்.
மேலும்இ பாரத ரத்னா விருதுஇ சரத் சந்திர சட்டோபத்யை, முன்ஷி பிரேம்சந்த் மற்றும் தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதி, போன்றோர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply