முதன் முறையாக யுத்த காலத்தில் காணாமற் போனவர்கள் பற்றிய தகவல்களை அரசு வெளியிடவுள்ளது
யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான தகவல்களை வெளியிட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இதற்கான தீர்மானத்தை இன்று வெளியிட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான தகவலை அவர்களது உறவினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
யுத்தத்திற்கு பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் பற்றிய விபரங்களும் வெளியிடப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒரு முக்கிய பரிந்துரையாகவும் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply