பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள இவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்திக்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் போது இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தக நடவடிக்கைகள், கலாச்சார நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply