எதிர்வரும் இரண்டு வாரங்களில் மீள்குடியேற்றம் நிறைவடையும்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ்ச தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்களில் 95 வீதமான மக்கள் இதுவரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக பாதுுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த 50 சிறுவர்களை தாண்டிக்குளம் மற்றும் மன்னார் பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் இல்லங்களில் தங்க வைப்படவுள்ளதாக கோட்டாபாய ராஜபக்ஷ்ச குறிப்பிட்டார்.

கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாகவும் அரசிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகின் எந்தவொரு நாட்டிலிலும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply