முல்லைத்தீவில் மற்றுமொரு மீள்குடியேற்றம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கிராமசேவகர் பிரதேசத்தில் வசித்த தற்போது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.
எதிர்வரும் 22 ஆம் திகதி இந்த மீள்குடியமர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள முல்லிகைத்தீவு கிராமசேகவர் பிரிவு மக்கள் 23 ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.
எனவே குறித்த இரண்டு கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள மக்கள் தாம் தற்போது வசிக்கும் பகுதியின் கிராமசேவையாளர் கடிதத்தையும் அதனை உதவி அரசாங்க அதிபர் உறுதிப்படுத்திய கடிதத்தையும் எடுத்து கொண்டு அறிவித்த தினங்களில் முல்லைத்தீவு கைவேலி கணேசா வித்தியாலத்துக்கு வருமாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply