கவனம்! சீனாவில் உள்ள தமது பிரஜைகளிற்கு ஜப்பான் அறிவித்தல்

சீனாவில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

ஜப்பான் அரசாங்கத்துக்கு எதிராக சீனாவில் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளதை அடுத்து ஜப்பானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து சீனாவில் உள்ள ஜப்பானுக்குச் சொந்தமான ஓய்வு விடுதிகள் சில சேதமாக்கப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சர்ச்சைக்குரிய தீவுப் பகுதி தொடர்பில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தீவுப் பகுதியில் ஜப்பானியப் பிரதிநிதிகள் சிலர் தமது நாட்டின் தேசியக் கொடியை பறக்கவிட்டதை அடுத்து நிலைமைகள் மோசமடைந்துள்ளன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply