திருக்கேதீஸ்வர திருப்பணிக்கு 365 மில்லியன் இந்தியா உதவி
புத்த பெருமானின் கபில வஸ்து எனப்படும் புனித சின்னங்களை இலங்கைக்கு எடுத்து வந்துள்ள இந்திய கலாசார அமைச்சர் குமாரி ஸெல்ஜா மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கும் விஜயம் செய்து அந்த ஆலயத்தின் மகா மண்டப திருப்பணி வேலைகளை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.
இந்த ஆலயத்தின் கருவறையும் ஏனைய முக்கிய இடங்களும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அந்த ஆலயத்தின் மகா மண்டபத்தையும் கருங்கல்லினால் அமைப்பதற்கான திருப்பணிக்கு 365 மில்லியன் ரூபா இந்திய பணத்தை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது என்று இந்திய அமைச்சரின் விஜயம் குறித்து விபரம் தெரிவித்த திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் செயலாளர் புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
இதற்கிடையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, ஜனாதிபதியினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள புத்தபெருமானின் புனித சின்னங்கள் தற்போது களனி பௌத்த விகாரையில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புனித சின்னங்கள் நாடெங்கிலும் உள்ள பௌத்த விகாரைகளுக்கு பொதுமக்களின் வழிபாட்டுக்காகக் கொண்டு செல்லப்புடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply